Jan 30, 2018 06:33 AM
‘கரு’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு!
‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சாய் பல்லவி, அந்த ஒரு படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். தற்போது இவர் தமிழில் ‘கரு’ படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
விஜய் இயக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அபார்ஷனை மையமாக வைத்து உருவாகும் இப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், அந்த தேதியில் ஏகப்பட்ட படங்கள் வெளியாவதால் ’கரு’ படம் பிப்ரவரி 23 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நாக சௌரியா, வெரோனிகா அரோரா, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கிலும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

