Jun 28, 2018 07:15 PM

முத்தத்தின் மூலம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய கஸ்தூரி!

முத்தத்தின் மூலம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய கஸ்தூரி!

சமூக வலைதளத்தில் எப்பொதும் தொடர்பில் இருக்கும் நடிகைகள் என்ற பட்டியல் தயாரித்தால் அதில் நடிகை கஸ்தூரி தான் முதலிடம் பிடிப்பார். பிற நடிகைகளைக் காட்டிலும் சமூக வலைதளத்தில் கஸ்தூரியின் எண்ட்ரி லேட்டாக இருந்தாலும், தற்போது அவர் தான் டெரராக இருக்கிறார்.

 

அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து துறையினர் பற்றியும் விமர்சிக்கும் கஸ்தூரி, தனது கருத்துக்களை தைரியமாகவும், வெளிப்படையாகவும் கூறிவருவதால், அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

இதற்கிடையே ‘தமிழ் படம் 2’-வில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தது சர்ச்சையானது. இதை பலரும் விமர்சனம் செய்திருந்தனர். இதற்கு அவரும் பதிலடி கொடுத்திருந்தார்.

 

இந்த நிலையில், கஸ்தூரியின் மேலும் ஒரு செயலால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. அதாவது, வணக்கம் ட்விட்டர் மொமண்டில் இணைந்துள்ள கஸ்தூரி, ”பிடிச்சு பின்னால வந்தவங்களுக்கும், கடிச்சு கலாய்க்க நிந்தவங்களுக்கும் அடிக்கடி தேடுறவங்களுக்கும் அடிவாங்கிட்டு ஓடுறவங்களுக்கும். அத்தனை பேருக்கும் உம்ம்மா...” என்று பதிவிட்டுள்ளார்.

 

அவரது இந்த உம்மா...வை பற்றி தற்போது கருத்து கூறி வரும் நெட்டிசன்கள், அவரை கலாய்க்க செய்வதோடு, கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்.