Jan 31, 2018 09:45 AM

பிரபலத்தின் மகனை மணக்கும் பார்த்திபனின் மகள் கீர்த்தனா!

பிரபலத்தின் மகனை மணக்கும் பார்த்திபனின் மகள் கீர்த்தனா!

நடிகரும் இயக்குநருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் செய்தியை நேற்று வெளியிட்டிருந்தோம். ஆனால், மாப்பிள்ளை யார்? என்பது இதுவரை தெரியாமல் இருந்த நிலையில், இன்று அதுவும் தெரிந்துவிட்டது.

 

பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷன் அக்கினேனியை தான் கீர்த்தனா திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார். அக்‌ஷன் அக்கினேனி, கார்த்திக் சுப்புராஜின் ‘பீட்சா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்கியுள்ளார்.

 

அக்‌ஷனும், கீர்த்தனாவும் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தனர். அப்போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு, இவர்களது பெற்றோர் பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து, குடும்பத்தாரின் ஆசியோடு இந்த காதல் ஜோடி தம்பதிகளாகின்றார்கள்.