Feb 16, 2021 09:57 AM

கோலிவுட் பிரபலத்துடன் காதல்! - கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணமா?

கோலிவுட் பிரபலத்துடன் காதல்! - கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணமா?

’நடிகையர் திலகம்’ படத்திற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகின்றன.

 

ஏற்கனவே அரசியல்வாதியை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் ஒன்று வெளியானது. பிறகு அதை மறுத்து கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்தார்.

 

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

நடிகை கீர்த்தி சுரேஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தற்போது இருவர் பற்றிய காதல் தகவல் கோலிவுட்டில் வைரலாகியுள்ளது. 

 

Keerthy Suresh and Aniruth

அதே சமயம், இது குறித்து அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இரு தரப்பில் இருந்தும் எந்த ஒரு மறுப்போ அல்லது விளக்கமோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.