Jan 28, 2021 10:35 AM

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கும் ‘கூகுள் குட்டப்பன்’

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கும் ‘கூகுள் குட்டப்பன்’

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிகுமார், தான் இயக்கிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்ததோடு, பிற இயக்குநர்களிடன் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், கமல்ஹாசனின் ‘தெனாலி’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக படம் ஒன்றை தயாரிக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், அதில் முக்கிய் கதாப்பாத்திரம் ஒன்றிலும் நடிக்கிறார். ‘கூகுள் குட்டப்பன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படத்தின் துவக்க இழா இன்று பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, இயக்குநர் விக்ரமன், பார்த்திபன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

 

10 ஆண்டுகளாக கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்குகிறார்கள். இதில் கே.எஸ்.ரவிகுமாருடன் பிக் பாஸ் பிரபலங்கள் தர்ஷன், லொஸ்லியா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க, யோகி பாபு, மனோபாலா, மாரியப்பன், ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். 'பண்டிகை', 'ரங்கா' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ஆர்வி ஒளிப்பதிவாளராகவும், இசையமைப்பாளராக ஜிப்ரானும், பாடலாசிரியராக மதன் கார்க்கியும் பணிபுரியவுள்ளனர்.

 

Google Kuttappan

 

ஆர்.கே செல்லுலாய்ட்ஸ் சார்பில் கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தென்காசியில் தொடங்குகிறது.

 

காமெடி மற்றும் செண்டிமெண்ட் என்று இரண்டும் கலந்த வித்தியாசமான திரைக்கதையோடு உருவாக உள்ள ‘கூகுள் குட்டப்பன்’ தமிழக ரசிகர்களை ஈர்ப்பதோடு, திரையரங்குகளீல் சிரிப்பலைக்கு கியாரண்டி தரக்கூடிய படமாகவும் இருக்கும், என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.