Mar 19, 2019 07:07 AM

உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் ’குச்சி ஐஸ்’!

உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் ’குச்சி ஐஸ்’!

உலகமயமாக்கல் பற்றி மக்களை சிந்திக்க வைக்கும் விதத்தில் உருவாகும் படத்திற்கு ‘குச்சி ஐஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெயப்பிரகாஷ்.வி, இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சாதிசனம்’, ‘காதல் எப்.எம்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கும் மூன்றாவது படமான ‘குச்சி ஐஸ்’ படத்தை திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் சார்பில் ஜெயபாலன் தயாரிக்கிறார்.

 

பிக் பாஸ் புகழ் ‘நாடோடிகள்’ பரணி, புதுமுகம் ரத்திகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள்.

 

தோஷ் நந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு பழநீஸ் கே.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

உலகமயமாக்கல் கொள்கை, தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவர் வாழ்க்கையையும், சமூகத்தையும் எப்படி பாதித்திருக்கிறது என்பதை உணர்வு பூர்வமாக சொல்லும் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் துவக்க விழா ஈரோட்டில் சமீபத்தில் நடைபெற்று, படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.