Jan 30, 2021 12:39 PM

குஷ்பு லெஸ்பியனாக நடித்தாரா? - சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் இதோ

குஷ்பு லெஸ்பியனாக நடித்தாரா? - சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான குஷ்பு, தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருவதோடு, திரைப்பட தயாரிப்பு மற்றும் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் குஷ்பு, இந்தி சினிமா மூலமாகவே நடிகையாக அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

 

இதற்கிடையே, குஷ்புவின் ஆரம்ப கால திரைப்படங்களின் புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல ஆண்கள் குஷ்புவை தூக்கி வைத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது.

 

இந்த நிலையில், குஷ்பு சக நடிகை ஒருவருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஃபரா என்ற நடிகைக்கு குஷ்பு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், குஷ்பு லெஸ்பியன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார், என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

ஆனால், அது எத்தகைய திரைப்படம் மற்றும் எந்த மாதிரியான கதாப்பாத்திரம் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே சமயம், அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Kushboo