Mar 27, 2019 11:03 AM

நயன்தாராவின் ‘ஐரா’-வை கைப்பற்றிய முன்னணி தொலைக்காட்சி!

நயன்தாராவின் ‘ஐரா’-வை கைப்பற்றிய முன்னணி தொலைக்காட்சி!

நயன்தாரா நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் மக்கள் மட்டும் இன்றி திரையுலகினரிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னணி ஹீரோவுடனாகட்டும் அல்லது ஹீரோயின் சப்ஜக்ட் என்று அவர் எந்த படத்தில் நடித்தாலும் அப்படம் வெற்றி பெறுவதால், சினிமா வியாபாரிகளிடம் நயன்தாரா படத்திற்கு தனி வரவேற்பு உண்டு.

 

அந்த வகையில், நாளை (மார்ச் 28) உலகம் முழுவதும் வெளியாக உள்ள நயன்தாராவின் ‘ஐரா’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹாரர் பிளஸ் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா, முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, முற்றிலும் மாறுபட்ட வேடத்திலும் நடித்திருக்கிறார்.

 

விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாவது போல மிகப்பெரிய அளவில் ’ஐரா’ வெளியாக உள்ள நிலையில், படத்தின் சாட்டிலைட் உரிமையை முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி கைப்பற்றியிருக்கிறது.

 

Vijay TV got the Airaa

 

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சர்ஜூன் இயக்கியிருக்கும் இப்படத்தில் கலைரசன், யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.