Apr 19, 2019 05:22 PM

நயன்தாராவை வளைத்த முன்னணி சேனல்!

நயன்தாராவை வளைத்த முன்னணி சேனல்!

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக உள்ள நயன்தாரா, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா குழுமத்தை சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரியின் தென்னிந்திய விளம்பர தூதராக ஒப்பந்தமாகியிருப்பதையும், விரைவில் அவர் தனிஷ்க் ஜுவல்லரி தொடர்பான விளம்பரப் படங்களில் நடிக்க இருக்கும் செய்தியை நாம் பார்த்தோம்.

 

இந்த நிலையில், முன்னணி தமிழ் சேனல்களில் ஒன்றான கலர்ஸ் டிவி நயன்தாராவை வளைத்துள்ளது. முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து நிகழ்ச்சி நடத்துவதில் தொலைக்காட்சிகளுக்கு இடையே கடும் போட்டு நிலவுவதால், பல சேனல்கள் பெரிய நடிகர் நடிகைகளுக்கு வலை வீசி வருகிறார்கள்.

 

அந்த வகையில், விரைவில் நயன்தாராவை கலர்ஸ் டிவி-யில் பார்க்கலாம், என்று அந்த தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

அதே சமயம், நயன்தாரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறாரா அல்லது பேட்டி கொடுக்கப்போகிறாரா, என்ற எந்த தகவலையும் கலர்ஸ் வெளியிடவில்லை.