Apr 20, 2019 02:36 PM

ஹீரோவாக களம் இறங்கும் லெஜண்ட் சரவணன்! - இயக்குநர், ஹீரோயின் யார் தெரியுமா?

ஹீரோவாக களம் இறங்கும் லெஜண்ட் சரவணன்! - இயக்குநர், ஹீரோயின் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அவ்வபோது சில ஸ்டார்கள் அறிமுகமாகி ரசிகர்களையும், சினிமாவையும் அதிர வைப்பதுண்டு. அந்த வகையில் சரவணா ஸ்டோர் ஆடை விற்பனை மையத்தின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்க உள்ளார்.

 

சரவணா ஸ்டோரின் விளம்பரப் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் சரவணனை, மக்களும், நெட்டிசன்களும் கலாயோ கலாய் என்று கலாய்த்து வந்தாலும், அதை எல்லாம் கண்டுக்கொள்ளாத அவர், சினிமாவில் இறங்குவதற்கான சரியான நேரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

 

தென்னிந்திய நடிகர்கள் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திர கலை விழாவில் கலந்துக் கொண்டு மிகப்பெரிய தொலையை நன்கொடையாக வழங்கிய சரவணன், தற்போது படம் ஒன்றில் நாயகனாக அறிமுகமாக இருப்பதாகவும், அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆனால், அப்படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்?, ஹீரோயின் யார்? போன்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதே சமயம், முன்னணி ஹீரோயின்கள் பலர் லெஜண்ட் சரவணனுடன் ஜோடியாக நடிக்க ரெடியாக இருப்பதோடு, பெரும் தொகையை சம்பளமாக எதிர்ப்பார்க்கவும் செய்கிறார்களாம்.