”சிம்பு மீது ஈர்ப்பு உள்ளது” - பிரபல நடிகையின் ஓபன் டாக்

பல்வேறு சர்சைகளுக்கு உள்ளான சிம்பு, பெண்கள் உடன் இணைத்தும் அவ்வபோது கிசுகிசுக்கப்படுவார். அதேபோல், சில நடிகைகளை காதலித்து தோல்வியும் அடைந்திருக்கிறார். தற்போது அனைத்து பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்காக சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறார்.
மலைக்கு போய்ட்டு வந்த பிறகு சிம்பு புது மனிதராக மாறுவாறா அல்லது பழையபடியே தனது வேலையை காட்டுவாரா, என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில், நடிகை தன்ஷிகா சிம்பு மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக, வெளிப்படையாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘பேராண்மை’ மூலம் சினிமாவில் அறிமுகமான தன்ஷிகா, பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும், ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.
தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து வரும் தன்ஷிகா, ‘கிட்னா’, ‘யோகிடா’, ‘இருட்டு’, ’லாபம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் திருமணம் மற்றும் காதல் குறித்து பேசிய தன்ஷிகா, தனக்கு நடிகர் சிம்பு மீது ஈர்ப்பு இருப்பதாக தெரிவித்ததோடு, தனக்கு கணவராக வரப்போகிறவர் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும், என்றும் தெரிவித்தார்.