Nov 18, 2019 03:56 PM

எஸ்கேப்பான் காதலன்! - சீரியல் நடிகையின் திருமணம் நின்றுபோனது

எஸ்கேப்பான் காதலன்! - சீரியல் நடிகையின் திருமணம் நின்றுபோனது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

இதற்கிடையே, நடிகை ரோஜாவுக்கு கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணம் தள்ளிப் போவதாக கூறப்பட்டது.

 

இந்த நிலையில், பிரியங்காவை திருமணம் செய்துக்கொள்ள இருந்த அவரது காதலர், வெளிநாட்டுக்கு ஓடிவிட்டதால் அவரது திருமணம் நின்றுவிட்டதாம்.

 

ராகுல் என்பவரை நடிகை பிரியங்கா காதலித்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திடீரென்று இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் தள்ளிப்போனது.

 

ஆனால், கருத்துவேறுபாடு பெரிய பிரச்சினையாக வெடித்ததை தொடர்ந்து திருமணம் நின்றுவிட்டது. இதையடுத்து ராகுல் மலேசியாவுக்கு சென்றுவிட்டாராம். அவரை தொடர்புகொள்ள பிரியங்கா முயற்சித்து முடியாமல் போனதாம். பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு ராகுலை பிரியங்க தொடர்பு கொண்டு பேச, அதுவும் தோல்வியில் தான் முடிந்ததாம்.

 

Priyanka and Raghul

 

மொத்ததில், நடிகை பிரியங்காவின் திருமணம் நடக்காது, அது நிச்சயதார்த்ததோடு முடிந்துவிட்டதாக அவரே தெரிவித்துவிட்டார்.