Jan 31, 2018 11:26 AM

லைகா தயாரிப்பில் சூர்யா!

லைகா தயாரிப்பில் சூர்யா!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தை ரூ.450 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வரும் லைகா நிறுவனம், விஜய் இயக்கத்தில் ‘கரு’ என்ற படத்தையும் தயாரித்துள்ளது. சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் இப்படம் பிப்ரவரி  மாதம் 23 ஆம் தேதி ரிலீஸாகிறது.

 

இந்த நிலையில், சூர்யாவின் 37 வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இப்படம் அவரது 36 வது படமாகும். இப்படம் முடிந்த பிறகு லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். 

 

கடந்த பல ஆண்டுகளாக தனது குடும்ப தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பில் நடித்து வந்த சூர்யா, ஞானவேல்ராஜா ஏற்படுத்திய கடனால் வெளி நிறுவனப் படங்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம்.