Feb 19, 2020 06:41 AM

பூஜையுடன் தொடங்கிய ‘மாநாடு’ படம்!

பூஜையுடன் தொடங்கிய ‘மாநாடு’ படம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில், சுரேஷ் காமட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படம் 2019 ஆண்டே தொடங்க வேண்டியது. ஆனால், சில பிரச்சினைகளால் தொடங்காமல் இருந்த இப்படம், டிராப்பாகும் நிலைக்கு சென்ற நிலையில், தற்போது படப்பிடிப்பு விரைவில் துவங்கும் நிலைக்கு வந்துள்ளது.

 

இப்படத்திற்காக தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள சிம்பு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல், இப்படத்தில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. இதில் பாரதிராஜா, மனோஜ், வெங்கட் பிரபு, சிம்பு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

 

இதோ புகைப்படங்கள்,

 

Maanaadu Pooja

 

Maanaadu Pooja

 

Maanaadu Pooja

 

Maanaadu Pooja