Jun 26, 2018 02:09 PM
தனுஷின் ‘மாரி 2’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாரி 2’ படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பிரசன்ன ஜி.கே படத்தொகுப்பு செய்கிறார். வாசுகி பாஸ்கர் ஆடை வடிவமைப்பை மேற்கொள்கிறார்.
விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துள்ளது. இறுதியாக ஒரு சண்டைக்காட்சியுடன் படப்பிடிப்பு முடிந்தது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் இன்னும் படமாக்கப்படாமல் இருக்கிறது. அப்பாடல் காட்சியும் விரைவில் படமாக்கப்பட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.