Jun 28, 2018 07:30 PM
மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்த மது பாலா!

மணிரத்னத்தின் ‘ரோஜா’, ஷங்கரின் ‘ஜெண்டில் மேன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த மது பாலா, பிறகு இந்தியில் சில படங்களில் நடித்தார். பிறகு திருமணம் செய்துக்கொண்டு மும்பையில் செட்டிலானவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில், பாபி சிம்ஹா நடிக்கும் ‘அக்னி தேவ்’ படத்தின் மூலம் மது பாலா மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகியிருக்கிறார். இந்த தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தாலும், தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
‘சென்னையில் ஒருநாள் 2’ படத்தை இயக்கிய ஜே.பி.ஆர் மற்றும் அறிமுக இயக்குநர் சாம் சூர்யா ஆகியோர் இயக்கும் இப்படத்தில் மது பாலா முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.