May 11, 2020 04:16 AM

47 வயதில் திருமணமா? - பிரபல தமிழ் நடிகையின் சோக கதை

47 வயதில் திருமணமா? - பிரபல தமிழ் நடிகையின் சோக கதை

நடிகர்கள், நடிகைகள் சிலருக்கு திருமணம் காலதாமதமாகவே நடக்கிறது. ஆனால், தற்போதைய சூழலில் நடிகைகள் சில பிஸியாக இருக்கும் போதே திருமணம் செய்துக் கொண்டு தொடர்ந்து கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். ஆனால், சில நடிகைகள் மட்டும் சுமார் 40 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

 

அந்த வகையில், பிரபல தமிழ் நடிகையான சித்தாரா 47 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். கே.பாலச்சந்தரின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சித்தாரா, தொடர்ந்து ‘புரியாத புதிர்’, ‘புது வசந்தம்’, ‘காவல் கீதம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பதோடு, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

 

தற்போது அம்மா, அக்கா உள்ளிட்ட வேடங்களில் நடித்து வருவதோடு, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் சித்தாரா, 47 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Actress Chithara

 

இது குறித்து சமீபத்திய பேட்டியில் ஒன்றில் பேசிய சித்தாரா, ”என் வாழ்க்கையில் நான் முக்கிய நபரை இழந்துவிட்டேன். அதனால் தான் திருமணம் வேண்டாம், என்று முடிவு செய்தேன். அதன்படி, இப்போது வரை திருமணம் பற்றி நான் யோசிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும், இப்போது திருமணம் செய்துக் கொள்ள வாய்ப்பு வந்தால் திருமணம் செய்துக் கொள்வீர்களா? என்று சித்தாராவிடம் கேட்டதற்கு, “அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை” என்று பதில் அளித்தவர், வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது, என்றும் தெரிவித்துள்ளார்.

 

சித்தாரா, தனது வாழ்க்கையில் முக்கிய நபரை இழந்துவிட்டதாக கூறியது, அவரது தந்தையை தானாம். அவரது தந்தை இறந்த பிறகு அவர் திருமணம் குறித்து யோசிக்காமல் தனது குடும்பத்தை பற்றி மட்டுமே யோசித்தாராம்.