Apr 17, 2020 04:49 AM

நடிகருடன் திருமணம்! - மனம் திறந்த ரைசா

நடிகருடன் திருமணம்! - மனம் திறந்த ரைசா

பிக் பாஸ் சீசன் 1 மூலம் மக்களிடம் பிரபலமானவர் ரைசா வில்சன். மூன்றாம் நிலை மாடலான இவர், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்த நிலையில், பிக் பாஸ் மூலம் ஹீரோயின் வாய்ப்பு பெற்றார். அதன்படி, ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் கதாநாயகி நடித்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

 

மேலும், ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி படத்தில் பற்றி எரிந்ததால், நிஜத்திலும் அவர்கள் அதே கெமிஸ்ட்ரியுடன் தான் சுற்றி வருவதாக கூறப்பட்டது. அதை கன்பாஃர்ம் செய்யும் விதத்தில் ரைசாவும், அவ்வபோது ஹரிஷ் கல்யாண் குறித்து பேசி வந்தார்.

 

தற்போது ‘ஆலீஸ்’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘எப்.ஐ.ஆர்’ ஆகிய படங்களில் நடித்து வரும் ரைசா, அவ்வபோது சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார். அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார். 

 

அந்த வகையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களுடன் ரைசா பேசுகையில், ஒரு ரசிகர், “ஹரிஷ் கல்யாண் அண்ணாவை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர்,. “ஆம், அவரை தான் கல்யாணம் செய்துக் கொள்ளப் போகிறேன். ஆனால், அவரிடம் இதை சொல்லாதீர்கள்” என்று தெரிவித்தார்.

 

Raiza and Harish Kalyan

 

அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் போக விரும்புகிறேன், என்று கூறிய  ரைசா, அது தொடர்பாக சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களிடம் கருத்து கணிப்பே நடத்தினார், என்பது குறிப்பிடத்தக்கது.