Mar 27, 2019 04:38 AM

திருமணமான பிரபலத்தின் மீது காதல்! - நடிகை மேகா ஆகாஷால் கோலிவுட்டில் பரபரப்பு

திருமணமான பிரபலத்தின் மீது காதல்! - நடிகை மேகா ஆகாஷால் கோலிவுட்டில் பரபரப்பு

தெலுங்கு சினிமா மூலம் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய மேகா ஆகாஷ், கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை நோக்கி பாயும்’ தோட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரி கொடுத்தார். ஆனால், அப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. முதல் படம் வெளியாகவில்லை என்றாலும், மேகா ஆகாஷுக்கு பட வாய்ப்புகள் குவிந்துக் கொண்டு தான் இருக்கிறது.

 

அதன்படி, ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாகதான் வருவேன்’, ‘பூமராங்’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கும் மேகா ஆகாஷ், தற்போது சில இந்தி மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிகமான தமிழ்ப் படங்களில் நடிக்க விரும்புவதாக கூறிய மேகா ஆகாஷிடம், விஜய், அஜித், டோனி ஆகியோர் உங்கள் முன்பு நேரில் வந்தால் என்ன கேட்பீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

 

அதற்கு ஜாலியாக பதில் சொன்ன மேகா ஆகாஷ், “விஜயிடம் நடனம் கற்றுக் கொடுக்க சொல்வேன், அஜித்திடம் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள், என்று கேட்பேன். டோனியை நேரில் பார்த்தால், உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

திருமணமாகி குழந்தை இருக்கும் டோனி மீது மேகா ஆகாஷுக்கு இருக்கும் காதலைப் பார்த்து ரசிகர்கள் பலர், அவர் மீது கோபம் கொள்ள, பலர் அவரை கலாய்த்து வருகிறார்கள்.

 

Dhoni

 

எது எப்படியோ, இந்த இளம் நடிகையின் காதல் பதிலால், தற்போது கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.