Dec 25, 2017 05:38 PM

மகனுக்கு வில்லனான மோகன் பாபு!

மகனுக்கு வில்லனான மோகன் பாபு!

1980 களில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்த மோகன் பாபு, வசூல் மன்னன் என்ற பெயரும் எடுத்தார். தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து வந்தவர், தெலுங்கில் ஹீரோவாக பல படங்களில் நடித்தவர், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.

 

கடந்த 2 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த மோகன் பாபு, தற்போது ‘காயத்ரி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். மோகன் பாபுவின் மகன் மஞ்சு விஷ்ணு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரேயா, நிகிலா விமல் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். 

 

சிறு இடைவேளைக்குப் பிறகு இப்படத்தில் நடித்திருக்கும் மோகன் பாபு, தனது மகனுக்கே வில்லனாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மோகன் பாபு வில்லனாக நடித்த அனைத்துப் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதால், இப்படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம்.