Mar 11, 2019 05:42 PM

ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகும் ’முனி 4 - காஞ்சனா 3’

ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகும் ’முனி 4 - காஞ்சனா 3’

ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ தொடர்ந்து மூன்று பாகங்களாக வெளியாகி தொடர் வெற்றிகளை பெற்றது. இதனை தொடர்ந்து முனி படத்தின் நான்காம் பாகமான ‘காஞ்சனா 3’ பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

 

சன் பிக்சர்ஸ் வழங்க, ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகமான பொருட் செலவில் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

 

திகில் படங்களை காமெடியாக சொல்லும் டிரெண்டை உருவாக்கிய காஞ்சனா திரைப்படத்தின் மூன்றாம் பாகமான ‘முனி 4 - காஞ்சனா 3’சம்மர் ஸ்பெஷலாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

 

பாராளுமன்ற தேர்தல் முடிந்த மறுநாளே படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.