நான்கு பேருடன் சிக்கிய நமீதா! - போலீசார் அதிரடி சோதனை

கணவர் உள்ளிட்ட நான்கு பேருடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்ற நடிகை நமீதா காரை மடக்கி போலீசார் சோதனை நடத்த, அவர்களுடன் நமீதா வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக-வில் இணைந்த நடிகை நமீதா, கடந்த தேர்தலின் போது நட்சத்திர பேச்சாளராக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதே சமயம், தற்போது நடைபெற உள்ள பாரளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு தருவதாக இல்லை, என்று கூறியவர், அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
இந்த நிலையில், தனது கணவர் உள்ளிட்ட நான்கு பேருடன் ஏற்காட்டிற்கு நமீதா சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் நோக்கில், சேலம் மாவட்டம், புலிகுத்தி தெரு பகுதியில் பறக்கும் படை அலுவர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்வதற்காக அதிகாரிகள் நிறுத்தினர். அந்த காரில் நடிகை நமீதா மற்றும் அவருடைய கணவர் உட்பட 4 பேர் இருந்தனர். இதனையடுத்து, அந்த காரை சோதனை செய்ய அதிகாரிகள் முயன்றனர். இதற்கு நமீதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நடுரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தான், வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக அவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, நமீதாவின் காரில் சோதனை நடத்தப்பட்டது. நமீதா வைத்திருந்த பையை பெண் போலீசார் சோதனை நடத்தினர்.
ஆனால், இந்த சோதனையின் போது நமீதா மற்றும் அவருடன் வந்தவர்களிடம் அளவுக்கு மேல் பணம், ஏதும் இல்லை என்பது தெரிய வந்தது. உடனே அவரது காரை போலீசார் திருப்பி அனுப்பினர்.