Nov 19, 2019 06:13 AM

’நந்தினி’ சீரியல் நடிகைக்கு இரண்டாவது திருமணம்! - மாப்பிள்ளை யார் தெரியுமா?

’நந்தினி’ சீரியல் நடிகைக்கு இரண்டாவது திருமணம்! - மாப்பிள்ளை யார் தெரியுமா?

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நந்தினி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நித்யா ராம். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், தெலுங்கு மற்றும் கன்னட டிவி தொடர்களில் பிரபலமான நடிகையாக வலம் வர, ‘நந்தினி’ சீரியல் இவரை தமிழகத்திலும் பிரபலமாக்கியது.

 

‘நந்தினி’ தொடரை தொடர்ந்து மேலும் சில தமிழ் டிவி தொடர்களில் நடித்து வரும் நித்யா ராமுக்கு அடுத்த மாதம் இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது.

 

ஏற்கனவே வினோத் கெளடா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நித்யா ராம், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தியவர், ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒவரை காதலித்து வந்தார்.

 

நீண்ட நாட்களாக நீடித்த இவர்களது காதல் தற்போது திருமணத்தில் முடிந்திருக்கிறது. நித்யாவுக்கும், ஆஸ்திரேலிய தொழிலதிபருக்கும் வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

 

இந்த திருமண வேலைகளை, நித்யா ராமின் தங்கையான பிரபல கன்னட நடிகை ரச்சிதா ராம் தான் பார்த்து வருகிறாராம்.