Feb 17, 2021 05:49 AM
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘நதி’!

’லிசா’, ‘ஏமாலி’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த சாம் ஜோன்ஸ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நதி’. ஹீரோயினாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். அறிமுக இயக்குநர் தாமரைச்செல்வன் இயக்கும் இப்படத்தை மாஸ் சினிமாஸ் சார்பில் சாம் ஜோன்ஸ் தயாரிக்கிறார்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரம் ஹீரோவுக்கு இணையான பலம் வாய்ந்ததாக இருப்பதால் முன்னணி இயக்குநர் ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும், சுரேகவாணி, முனிஷ்காந்த், வேல ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.
மதுரை, தேனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்ட இப்படம் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் உள்ளது.