Apr 18, 2019 07:26 AM

சின்னத்திரையில் நயன்தாரா! - இந்தியாவின் முன்னணி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சின்னத்திரையில் நயன்தாரா! - இந்தியாவின் முன்னணி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, தனக்கென்று தனி பாதையை போட்டு பயணிக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பவர் தற்போது முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட தொடங்கியிருக்கிறார்.

 

ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தாலும், தனது கதாபாத்திரம் வலுவாக இருந்தால் தான், நடிக்க ஓகே சொல்லும் நயன்தாரா, அதேபோல் படம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும், டிவி பேட்டிகளிலும் பங்கேற்க மாட்டேன், என்பதிலும் உறுதியாக இருப்பதோடு, கால்ஷீட் கொடுக்கும் போதே இது குறித்து பேசி ஒப்பந்தமும் போட்டுக் கொள்கிறாராம். இதனால் தான், நயன்தாராவை பெரிய திரையில் மட்டுமே பார்க்க முடிகிறது.

 

இந்த நிலையில், பெரிய திரையில் மட்டுமே பார்த்த நயன்தாராவை இனி சின்னத்திரையான டிவி-யிலும் அடிக்கடி பார்க்கலாம்.

 

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா குழுமத்தை சேர்ந்த தங்க நகை விற்பனையகமான தனிஷ்க் ஜுவல்லரியின் தென்னிந்திய விளம்பர தூதராக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே சில நிறுவனங்களில் நயன்தாரா விளம்பர தூதராக நயன்தாரா இருந்தாலும், தற்போது அவர் ஏற்றுள்ள தனிஷ்க் ஜுவல்லரியின் பொருப்பு மிகப்பெரியதாம்.

 

தென்னிந்தியா முழுவதும் திறக்கப்பட உள்ள புதிய தனிஷ்க் ஜுவல்லரியின் கிளைகளின் திறப்பு விழாவில் பங்கேற்கும் நயன்தாரா, தனிஷ்க் ஜுவல்லரியின் பேப்பர் விளம்பரம் மட்டும் இன்றி டிவி விளம்பரத்திலும் நடிக்க இருக்கிறார். குறிப்பாக தனிஷ்க் ஜுவல்லரியின் திருமண நகைகளை நயன்தாராவை வைத்து விளம்பரம் செய்ய இருக்கிறார்களாம். வரும் அக்‌ஷய திருதியையில் நயன்தாரா நடித்த விளம்பரத்தை ஒளிபரப்பு செய்ய இருக்கும் தனிஷ்க் நிறுவனம், அதில் இருந்து தென்னிந்தியா முழுவதும் நயன்தாராவை வைத்து மிகப்பெரிய விளம்பர நிகழ்வுகளையும் செய்ய இருக்கிறதாம்.

 

Nayanthara in  Tanishq

 

ஆக, இனி நயன்தாராவை அடிக்கடி சின்னத்திரையில் பார்க்கலாம்.