Dec 26, 2017 07:27 AM

நயந்தாராவுக்கு ஸ்பெஷலாக அமைந்த கிறிஸ்துமஸ் பண்டிகை!

நயந்தாராவுக்கு ஸ்பெஷலாக அமைந்த கிறிஸ்துமஸ் பண்டிகை!

நேற்று உலகம் முழுவதும் கிரிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், நடிகை நயந்தாராவுக்கு நேற்றைய பண்டிகை ரொம்பவே ஸ்பெஷலான பண்டிகையாக அமைந்துள்ளது. காரணம், அவர் சினிமா துறைக்கு வந்து நேற்றுடன் 14 வருடங்கள் ஆகின்றன.

 

இதுமட்டும் அல்ல, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை நயன் கொண்டாடியுள்ளதால், அது மற்றொரு ஸ்பெஷலாகவும் மாறியுள்ளது.

 

நயந்தாராவுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடியதை எண்ணி குஷியடைந்துள்ள விக்னேஷ் சிவன், தனது சந்தோஷத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.