Jul 03, 2018 11:29 AM

கமலுடன் நடிக்க நயந்தாரா போட்ட முக்கிய கண்டிஷன்!

கமலுடன் நடிக்க நயந்தாரா போட்ட முக்கிய கண்டிஷன்!

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயந்தாரா, தற்போது அஜித், கமல், சிரஞ்சீவி என்று முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார். 

 

அஜித்திடம் தனது காதலருக்கு கதை சொல்ல அப்பாயின்மெண்ட் வாங்கிக் கொடுப்பதற்காக, எந்தவித கண்டிஷமும் இன்றி நடிக்க சம்மதித்தவர், கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.

 

அதன்படி, தான் கொடுக்கப்பட்ட தேதிகளில் மட்டுமே படப்பிடிப்பு வருவேன் என்றும், அப்படி தான் கொடுத்த தேதிகளை தவிர கூடுதலான தேதிகளில் படப்பிடிப்பு நடந்தால், அப்போது எந்த வேலையும் இல்லாமல் சும்மா இருந்தால் மட்டுமே தான் வருவேன், என்று கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.

 

மேலும், படத்தில் பிகினி உடை அணிய மாட்டேன், அதேபோல் முத்தக் காட்சி இருந்தால் அதை முன் கூட்டியே சொல்ல வேண்டும், என்றும் கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.