Jul 05, 2018 06:17 PM
கலையரசனுக்கு ஜோடியான நயந்தாரா!

நயந்தாரா நடிப்பில் ’கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகியப் படங்கள் வெளியாக உள்ள நிலையில், தற்போது அவர் அஜித்தின் ‘விஸ்வாம்’ படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இதை தொடர்ந்து கமலின் ’இந்தியன் 2’ நடிக்க இருப்பவர், லட்சுமி குறும்பட இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
பேய் படமாக உருவாகும் இப்படத்திற்காக நயந்தாரா வெறும் 25 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். ஒரே ஒரு வீட்டில் நடக்கும் இப்படத்திற்காக சென்னையில் பேய் பங்களா செட் போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் நயந்தாராவுக்கு ஜோடியாக கலையரசன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.