’தோழர் நயன்தாரா’! - தமிழகத்தை கலக்கும் போஸ்டர்கள்

நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து இழிவாக பேசியதற்கு நடிகர்கள், நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கூட நயன்தாராவுக்கு ஆதராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிரடி நடவடிக்கையாக ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதற்கு நயன்தாராவும் நன்றி தெரிவித்துள்ளார். இப்படி பல முனையில் இருந்தும் நயன்தாராவுக்கு ஆதரவு பெருகுவதினால், தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்திருக்கும் ராதாரவி, வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் நயன்தாராவுக்கு ஆதரவாகவும், ராதாரவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதை வலியுறுத்தியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
‘தோழர்.நயன்தாரா’ என்று அச்சடிக்கப்பட்டிருக்கும் இந்த போஸ்டர், தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த போஸ்டர்,