May 12, 2020 03:27 PM

இயக்குநரால் கர்ப்பமான நயன்தாரா! - அதிர்ச்சியில் காதலர்

இயக்குநரால் கர்ப்பமான நயன்தாரா! - அதிர்ச்சியில் காதலர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மட்டும் இன்றி லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. அவர் அவைகள் பற்றி கண்டுக்கொள்வதில்லை என்றாலும், அவரைப் பற்றி வெளியாகும் பகீர் தகவல்களுக்கும் பஞ்சமில்லை.

 

அந்த வகையில், நயன்தாரா பற்றி பரவும் தகவல் ஒன்றினால் அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி நயன்தாராவும், அவரது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் பேரதிர்ச்சியடைந்திருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

 

அதாவது, அன்னையர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், தனது தாய்க்கும், நயன்தாராவின் தாய்க்கும், அவர்களது புகைப்படங்களுடன் வாழ்த்து கூறியதோடு, நயன்தாரா கையில் குழந்தை வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு, தனது குழந்தைக்கு தாயாகப் போகிற நயனுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள், என்று பதிவிட்டிருந்தார்.

 

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், விக்னேஷ் சிவனால் நயன்தாரா, கர்ப்பமாகி விட்டதாகவும், விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கி விட்டார்கள். சில ஊடகங்களில் நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார், என்று செய்திகளும் வெளியாக தொடங்கிவிட்டது.

 

Actress Nayanthara

 

இதனை அறிந்த நயனும், விக்னேஷும் அதிர்ச்சியானதோடு, ஏதோ ஒரு ஆர்வத்துல நயன்தாராவுக்கு வித்தியாசமாக அன்னையர் தின வாழ்த்துகள் சொன்னால், அதை இப்படி பெரிய சர்ச்சையாக்கி விட்டார்களே, என்று கவலையும் அடைந்திருக்கிறார்களாம்.