இப்படி ஒரு விளம்பரம் தேவையா? - சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் அபிராமி

பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்களில் நடிகை அபிராமியும் ஒருவர். அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறியப்பட்ட அபிராமி, அதற்கு முன்பாகவே இந்தி திரைப்படங்களில் நடித்தாலும், பிக் பாஸ் மூலம் மக்களிடம் பிரபலமானார்.
தற்போது பல வெப் சீரிஸ்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வரும் அபிராமி, கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு இல்லாததால் வீட்டில் இருக்கிறார். அதே சமயம், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர், அதன் மூலம் சில தனியார் நிறுவன பொருட்களை விளம்பரம் செய்தும் வருகிறார்.
அந்த வகையில், உடலுக்கு போடப்படும் மாஸ்ட்ரைஸிங் ஒன்றை விளம்பரப்படுத்தும் வகையில் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர், “சோத்துக்கே வழியில்ல, இப்போ எதுக்குங்க இந்த முடிவு விளம்பரம்” என்று கேட்டுள்ளார். அவரைப் போல மேலும் பல ரசிகர்களும் அபிராமியின் இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், இது குறித்து விளக்கம் அளித்துள்ள அபிராமி, நான் விளம்பரம் மட்டும் செய்யவில்லை, கஷ்ட்டப்படுபவர்களுக்கு உதவிகளும் செய்து வருகிறேன். ஆனால், அதை விளம்பரப்படுத்த விரும்பவில்லை. எனவே, நீங்களும் பிறருக்கு உதவி செய்யுங்கள், நானும் செய்வேன், என்று பதில் அளித்துள்ளார்.