Oct 27, 2025 05:23 AM

டாக்டர். புனீத் ராஜ்குமாரின் நினைவுகளை கொண்டாடும் புதிய செயலி அறிமுகம்!

டாக்டர். புனீத் ராஜ்குமாரின் நினைவுகளை கொண்டாடும் புதிய செயலி அறிமுகம்!

மறைந்த பிரபல நடிகர் டாக்டர்.புனீத் ராஜ்குமாரின் காலத்தால் அழியாத நினைவுகளை கொண்டாடும் விதமாக ஸ்டார்ஃ பேண்டம் நிறுவனம் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.  மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிவேக தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதியதளம் ரசிகர்கள்தங்கள் நட்சித்திரங்களுடன் இணைந்து இருப்பதில் ஒரு புரட்சிகரமான அனுபவத்தை வழங்குவதற்கான புதிய முயற்சியாகும்.

 

ஸ்டார்ஃ பேண்டம் நிறுவனத்தின் தலைவரான டாக்டர். சமார்த்த ராகவ நாகபூஷணம் மற்றும் அவரது குழுவினரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், திருமதி. அஸ்வினி புனீத் ராஜ்குமார் அவர்களுடன் இணைந்து டாக்டர். புனீத் ராஜ்குமாரை கொண்டாடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு முன்னோடி டிஜிட்டல் அனுபவமாகும். 

 

இந்த தளத்தில் தொழில்நுட்பம், உணர்வுகள், பொழுதுபோக்கு மற்றும் சினிமா பாரம்பரியங்களைப் பாதுகாப்பதோடு, ரசிகர்களுக்கும், அவர்களின் அன்புக்குரிய நட்சத்திரங்களுக்கும் இடையே நீடித்த டிஜிட்டல் பிணைப்புகளை உருவாக்குகிறது.

 

விளையாட்டுக் கழகங்கள், பிரபலங்கள் மற்றும் பொது ஆளுமைகளை அவர்களின் ரசிகர்களுடன் ஒரு ஸ்மார்ட் டிஜிட்டல் சூழல் மூலம் இணைக்கும் நோக்கத்துடன் ஸ்டார் ஃபேண்டம் உருவாக்ப்பட்டது. 

 

கர்நாடகாவின் துணை முதல்வர் டி. கே. சிவக்குமார் முன்னிலையில் வெளியிடப்பட்ட இந்தப் புதிய APP-ல் ,செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML), மற்றும் உணர்ச்சி வரைபடம் (Emotion Mapping) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.

 

இந்தத் தளத்தில் டாக்டர். புனீத் ராஜ்குமாரின் ஸ்டைல், ஒழுக்கம் மற்றும் பாசிட்டிவ் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் மற்றும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ரசிகர்கள் இணைந்திருக்க உதவும் ஒரு டிஜிட்டல் அனுபவமாக மாற்றுகிறது.

 

ஸ்டார் ஃபேண்டம் நிறுவனத்தின் நிறுவனரான டாக்டர். சமார்த்த ராகவ நாகபூஷணம் பேசுகையில், “தங்கள் நட்சத்திரங்கள் தூண்டும் உணர்ச்சிகள் மற்றும் மதிப்புகளுடன் ரசிகர்களை நெருக்கமாகக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டார் ஃபேண்டம் உருவானது. புனீத் ராஜ்குமாரின் ஆளுமை இம்முயற்சியின் இதயத் துடிப்பாகத் தொடர்கிறது. டாக்டர். புனீத் ராஜ்குமார் APP-ன் மூலம், இந்தத் தொடர்பை மேலும் துடிப்புள்ளதாகவும், தனிப்பட்டதாகவும் மாற்ற AI-ஐ நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்.

 

இது வெறும் ஆரம்பம்தான். பாரம்பரியங்களைப் பாதுகாக்கவும், படைப்பாற்றலைக்கொண்டாடவும், ரசிகர்கள் தங்கள் ஹீரோக்களுடன் இதுவரை கற்பனை செய்யாத வழிகளில் தொடர்பு கொள்ளவும் புதிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இந்தத் தளம் தொடர்ந்து உருவாகும். உணர்ச்சி, புதுமை மற்றும் சமூகம் ஆகியவை ஒன்றிணைந்து தலைமுறைகளைக் கடந்து வாழும், நீடித்த தொடர்புகளை உருவாக்கும் ஈடுபாட்டின் ஒரு புதிய டிஜிட்டல் சகாப்தத்திற்கான வரைபடமாக ஸ்டார் ஃபேண்டமைக் காண்கிறோம்.

 

டாக்டர். புனீத் ராஜ்குமார் ஸ்டார் ஃபேண்டம் APP-ல் உலகெங்கிலும் உள்ள கன்னடசமூகத்திற்கு ஒருபு திய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இது 70 மில்லியனுக்கும் அதிகமானர சிகர்களை ஒரே டிஜிட்டல் கூரையின் கீழ் கொண்டு வந்து, உணர்ச்சிப்பூர்வமான உண்மைக் கணங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள கன்னடர்களை இணைக்க முயல்கிறது.” என்றார்.

 

Puneeth Rajkumar

 

வெளியீட்டு விழாவில் பேசிய திருமதி. அஸ்வினி புனீத் ராஜ்குமார், “புனீத் மக்களை மனதிலிருந்து இணைப்பதில் நம்பிக்கை வைத்திருந்தார். இந்தச் செயலி அந்த உணர்வை முன்னெடுத்துச் செல்கிறது — அவரைப் போற்றவும், அவரது விழுமியங்களைக் கற்றுக் கொள்ளவும், அவரது ஆற்றலை அவர்களின் அன்றாட வாழ்க்கையில் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் ரசிகர்களுக்கும் குடும்பங்களுக்கும் ஒரு இடத்தைக் கொடுக்கிறது.” என்றார்.

 

செயலியின் முக்கிய அம்சங்கள்: 

 

புனீத் ஸ்டார்ஃ பாண்டம் செயலி ஒவ்வொரு தலைமுறைக்கும் வடிவமைக்கப்பட்ட துடிப்பான அனுபவங்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.

 

Podcasts (பாட்காஸ்ட்கள்): முதன்முறையாக, திருமதி. அஸ்வினி புனீத் ராஜ்குமார் அவர்கள் டாக்டர். புனீத் ராஜ்குமார் மற்றும் ராஜ்குமார் குடும்பத்தின் மரபுடன் தான் மேற்கொண்ட பயணத்தைப் பகிர்ந்துகொள்கிறார். அனுஸ்ரீ தொகுத்து வழங்கும் இந்தத் தொடரில் நண்பர்கள், சகாக்கள் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள் இதுவரை காணாத கதைகள் மற்றும் மனமார்ந்த நினைவுகளை விவரிக்கிறார்கள்.

 

 * Chota Appu (சோட்டா அப்பு): குழந்தைகளுக்கான பாதுகாப்பான, வேடிக்கையான மற்றும் ஊக்கமளிக்கும் இடம், அப்புவால் ஈர்க்கப்பட்ட கதைகள் மற்றும் ரைம்களுடன் நிரம்பியுள்ளது.

 * Puneeth-Inspired Fitness (புனீத்-தழுவிய உடற்பயிற்சிகள்) :அவரது ஒழுக்கம், நேர்மறை மற்றும் வலிமையை பிரதிபலிக்கும் வழிகாட்டப்பட்ட உடற்பயிற்சி முறைகள் — பவர்ஸ்டாரைப் போலவே பயிற்சி செய்ய ரசிகர்களுக்கு அனுமதிக்கிறது.

 

 * Quizzes & Puzzles (வினாடி வினாக்கள் மற்றும் புதிர்கள்): சினிமா, கலாச்சாரம் மற்றும் பவர் ஸ்டாரின் வாழ்க்கையைக் கொண்டாடும் ஊடாடும் சவால்கள்.

 

 * Sandalwood Pulse (சாண்டல்வுட் பல்ஸ் ) : கன்னட சினிமாவில் இருந்து வரும் செய்திகள், வெளியீடுகள் மற்றும் திரைக்குப் பின்னால் உள்ள கதைகளை வழங்கும் ஒரு டிஜிட்டல் மையம்.

 

 * Connect to Connect (கனெக்ட்டுகனெக்ட் ): இந்தியா முழுவதிலும் உள்ள ரசிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து, உருவாக்கி, ஒன்றாக வளரும் ஒரு வகையான டிஜிட்டல் சமூகம்.

 

 * Daily Vibes (டெய்லிவைப்ஸ்):  பவர் ஸ்டாரின் உணர்வை ஒவ்வொரு நாளும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் வால்பேப்பர்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கம்.

 

இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில்உலகளவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பவர்ஸ்டாரின் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை இது அழைக்கிறது.

 

ஸ்டார் ஃபாண்டம் நிறுவனம் பற்றி : ஸ்டார் ஃபாண்டம் LLP விளையாட்டுக் கழகங்கள், பிரபலங்கள் மற்றும் பொது ஆளுமைகளை ஒரு பிரத்தியேகமான தளத்தின் மூலம் அவர்களின் ரசிகர்களுடன் இணைக்க முயற்சிக்கிறது.

 

இந்நிறுவனம் இந்தியாவின் பெங்களூருவில் தலைமையிடமாக உள்ளது. ஸ்டார் ஃபாண்டம் LLP குழுவில்டாக்டர். பிரமோத் பிரகாஷ், இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி;  நிதின் கிருஷ்ணமூர்த்தி, பார்ட்னர் & மார்க்கெட்டிங் மற்றும் கன்டென்ட் இன்னோவேஷன் துறைதலைவர்; தியாகராஜா ரவிச்சந்திரா, தலைமை கன்டென்ட் அதிகாரி; வருண் கவுடா, பார்ட்னர் & மக்கள் தொடர்பு மற்றும் பிராண்ட் உத்திதலைவர், மற்றும் பிரணவ சுந்தர், தயாரிப்பு மற்றும் பயனர்அனுபவத் தலைவர் ஆகியோர் உள்ளனர்.