Jul 09, 2018 09:35 AM

’சர்கார்’ விவகாரம் - விஜய் மீது புதிய வழக்கு

’சர்கார்’ விவகாரம் - விஜய் மீது புதிய வழக்கு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ திரைப்படம் டைடில் மற்றும் பஸ்ட் லுக் வெளியானதில் இருந்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அதே சமயம், படத்தின் மீது மிக்கப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

 

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற விஜய் சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படத்திற்கு அரசியல் கட்சியின் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தமிழக அரசின் பொது சுகாதார துறையும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், அந்த புகைப்படத்தை நீக்கிவிடுவதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

 

இந்த நிலையில், ‘சர்கார்’ படத்திற்கு எதிராக புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில், 

’சர்கார்’ பர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதற்கு ரூ.10 கோடியை அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.