Jun 29, 2018 05:52 PM

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு காதல் காவியம்!

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு காதல் காவியம்!

தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் போட்டியாளர்கள் ஆரவ், ஓவியா ஆகியோரது காதல் தான் நிகழ்ச்சியை பரபரப்பாக்கியது. அந்த காதலால் ஏற்பட்ட மோதல், அதனால் பாதிக்கப்பட்ட ஓவியா, மன நிலை பாதிக்கப்பட்டவரை போல நடந்துக் கொண்டது என முழு நிகழ்ச்சியும் பெரும் பரபரப்போடு ஒளிபரப்பானது.

 

இந்த நிலையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாம் சீசனிலும் ஒரு காதல் காவியம் உருவாகியுள்ளது. அதாவது, போட்டியாளர் மஹத் காதல் தோல்வி பாடல் ஒன்றை பாடியபடி, தனது முதல் காதல் அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கிறார்.

 

உடனே, அவர் அருகில் இருக்கும் யஷிகா ஆனந்தும் தேம்பி தேம்பி அழுவதோடு, அவரும் தனது முதல் காதல் குறித்து பேச இருப்பது போல புரோமோவில் காட்டப்படுகிறது. இதனால், இரண்டாம் சீசனிலும் ஆரவ் - ஓவியா காதல் காவியத்தைப் போல, மஹத் - யஷிகா ஆனந்த் காதல் காவியம் உருவகாலாம் என்று எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.