Mar 21, 2019 02:51 AM

சிம்புவுக்கு ஜோடி ரெடி! - அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்த ‘மாநாடு’

சிம்புவுக்கு ஜோடி ரெடி! - அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்த ‘மாநாடு’

‘செக்கச் சிவந்த வானம்’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படங்களை தொடர்ந்து சிம்புவின் அடுத்தப் படமாக ‘மாநாடு’ வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தலைப்பு அறிவிப்புக்கு பிறகு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காமலேயே இருக்கிறது.

 

இதற்கிடையே, மாநாடு படம் டிராப் ஆகும் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாக, உடனே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதற்கு மறுப்பும் தெரிவித்தார்.

 

இந்த நிலையில், அடுத்த மாதம் ‘மாநாடு’ படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுவதோடு, படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிஸி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷனி, தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது