Dec 22, 2020 04:23 PM
பாண்டியன் ஸ்டோர்ஸ்-ன் புதிய முல்லை இவர் தான்! - படப்பிடிப்பு புகைப்படம் லீக்

தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் சீரியல் நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்த சித்ரா, தற்போது உயிருடன் இல்லை என்றாலும், அவரைப் பற்றி பல ஊடகங்கள் தற்போதும் பேசி வருகிறது. அதே சமயம், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் சித்ரா நடித்த முல்லை கதாப்பாத்திரத்தில் நடிப்பது யார்? என்ற கேள்வி மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் குறித்து பல தகவல்கள் வெளியான நிலையில், அந்த வேடத்தில் ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்த காவ்யா ஒப்பந்தமாகியுள்ளார்.
காவ்யா முல்லை வேடத்தில் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கபப்ட்டு வருகிறது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,