Apr 22, 2019 05:19 AM

’பரியேறும் பெருமாள்’ படத்திற்கு மேலும் ஒரு கெளரவம்

’பரியேறும் பெருமாள்’ படத்திற்கு மேலும் ஒரு கெளரவம்

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ விமர்சன ரீதியாக மட்டும் இன்றி, வியாபார ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.

 

மேலும், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்ற பல விருதுகளை குவித்த ’பரியேறும் பெருமாள்’ படத்தின் விருது வேட்டை இன்னும் ஓயவில்லை. தொடர்ந்து பல்வேறு விருது நிகழ்வுகளில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு கெள்ரவிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், மும்பையில் இந்திய சினிமா விமர்சகர்களால் உருவாக்கப்பட்டு வழங்கப்படும் ‘கிரிட்டிக்ஸ் சாய்ஸ் பிலிம் அவார்ட்ஸ்’ (CRITICS CHOICE FILM AWRDS) விழாவில், 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது ‘பரியேறும் ‘பெருமாள்’ படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

 

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகை அதிதி ராவ் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு விருது வழங்கி கெளரவித்தார்கள்.