Dec 29, 2020 05:10 AM

இளைய தலைமுறைக்கு பாடம் சொல்லும் காதல் படம் ‘பழகிய நாட்கள்’

இளைய தலைமுறைக்கு பாடம் சொல்லும் காதல் படம் ‘பழகிய நாட்கள்’

தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் காதல் படங்கள் ஏராளமாக வெளியாகியிருந்தாலும், காதலின் புரிதலோடு இளைஞர்களுக்கு பாடம் சொல்லும் காதல் படம் எங்கள் என்பது அறிதான ஒன்று தான். அந்த வகையில், இளம் வயதில் வரும் காதலால் இளைஞர்கள் எப்படி தங்களது எதிர்காலத்தை தொலைக்கிறார்கல் என்றும், அதே காதல் பக்குவப்பட்ட வயதில் வரும் போது, அந்த காதலே அவர்களை எப்படி உயர்த்துகிறது, என்பதை சொல்லும் படம் தான் ‘அழகிய நாட்கள்’.

 

கொரோனா ஊரடங்கினால் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை கண் முன்னே நிறுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படம், இளம் வயதில் காதல் வயப்படும் பிள்ளைகளை பெற்றோர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற விஷயத்தை அழகாக சொல்லி, அனைத்து தரப்பு மக்களுக்குமான கமர்ஷியல் படமாக உள்ளது.

 

இப்படத்தின் ஹீரோவாக அறிமுக நடிகர் மீரான் நடிக்க, ஹீரோயினாக மேக்னா நடித்திருக்கிறார். இவர்களுடன் செந்தில் கணேஷ், வின்செண்ட் ராய், சுஜாதா, சிவக்குமார், சாய் ராதிகா, ஸ்ரீநாத், நெல்லை சிவா, மங்கி ரவி, செல்வராஜ், கவுதமி, முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

மணிவண்ணன், பிலிப் விஜயகுமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜான் ஏ.அலெக்ஸ், ரூபேஷ், ஷேக் மீரா ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஷேக் மீரா பின்னணி இசையமைத்துள்ளார். துர்காஷ் படத்தொகுப்பு செய்ய, எடிசன் நடனம் அமைத்துள்ளார்.

 

ராம்தேவ் பிக்சர்ஸ் சார்பில் ராம்குமார் தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்தேவ் இயக்கியுள்ளார்.

 

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ள இப்படம், வரும் ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

Pazhagiya Naatkal