Jul 06, 2018 12:06 PM

கள்ள நோட்டு வழக்கில் கைதான நடிகையின் பின்னணியில் சாமியார்!

கள்ள நோட்டு வழக்கில் கைதான நடிகையின் பின்னணியில் சாமியார்!

கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் கைதாகியுள்ள மலையாள நடிகை சூர்யாவுக்கு போலி சாமியாருடன் தொடர்பு இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

 

கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து தனி படை அமைத்த கேரள காவல் துறை, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது பிடிபட்ட இருவரிடம் விசாரிக்கையில், நடிகை ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

 

இதையடுத்து பிரபல மலையாள டிவி நடிகையான சூர்யாவின் வீட்டை போலீசார் சோதனையிட்ட போது, அவர் தனது வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சூர்யா மற்றும் அவரது தாய், தங்கை ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

 

சிறையில் இருக்கும் நடிகை சூர்யாவிடம், இதன் பின்னணி இருப்பவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், சூர்யாவுக்கு பின்னணியில், போலி சாமியார் ஒருவர் இருப்பது தெரிய வந்துள்ளது.