Nov 13, 2019 05:49 AM

’மிக மிக அவசரம்’ படத்தை பாராட்டிய புதுச்சேரி முதல்வர்!

’மிக மிக அவசரம்’ படத்தை பாராட்டிய புதுச்சேரி முதல்வர்!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’. பெண் காவலர்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ஸ்ரீபிரியங்கா கதாநாயகியாக நடித்திருக்கிறார். கதாநாயகனாக ஹரிஷ் நடித்திருக்கிறார். இவர்களுடன் வழக்கு எண் முத்துராமன், ராமதாஸ் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

மக்களுக்காக தங்களது இன்ப துன்பங்களை மறந்து பணியாற்றும் காவல் துறையில், பெண் காவலர்கள் எப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள், என்பதை சொல்லும் இப்படத்தை சினிமா ஜாம்பவான்கள் பலர் பாராட்டிய நிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் பலர் படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினார்கள்.

 

தற்போது மக்களால் கொண்டாடப்ப்ட்டு வரும் இப்படத்தை, பல உயர் காவல் துறை அதிகாரிகளும் பார்த்து வெகுவாக பாராட்டி வருவதோடு, இப்படத்தின் மூலம் காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களின் பிரச்சினைகள் குறித்து அரசு கவனம் கொள்ளும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், ‘மிக மிக அவசரம்’ படத்தை சமீபத்தில் பார்த்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, படத்தை பாராட்டியதோடு, நாயகி ஸ்ரீபிரியங்கா மற்றும் இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி ஆகியோரை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார்.

 

Miga Miga Avasaram