Nov 27, 2019 03:38 AM

பிரபல நடிகர் பாலாசிங் மரணம்!

பிரபல நடிகர் பாலாசிங் மரணம்!

நாசர் நடித்து இயக்கி தயாரித்த ‘அவதாரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான பாலாசிங், மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

 

‘அவதாரம்’ படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

 

அதன்படி, ’புதுப்பேட்டை’, ‘இந்தியன்’, ’பிரிவோம் சந்திப்போம்’, ‘கிரீடம்’, ’உதயா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வில்லன், குணச்சித்திரம் என்று அனைத்து வேடங்களிலும் நடித்து வந்தார்.

 

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் பாலாசிங்கை, அவரது குடும்பத்தார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

 

நடிகர் பாலாசிங்குக்கு தற்போது 67 வயதாகிறது. அவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் ஆகும். இவர் முதலில் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அங்கு சுமார் பத்து படங்களில் நடித்த பிறகே தமிழில் நடிகராக அறிமுகமானார்.