Apr 19, 2020 04:09 AM

பிரஷாந்துக்கு நோ சொன்ன பிரபல நடிகை!

பிரஷாந்துக்கு நோ சொன்ன பிரபல நடிகை!

2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஜானி’ படத்திற்குப் பிறகு தெலுங்குப் படம் ஒன்றில் நடித்த பிரஷாந்த், தமிழ்ப் படத்திற்காக நல்ல கதையை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்தியில் தபு, ராதிகா ஆப்தே, ஆயூஸ்மான் குரானா ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய அவரது தந்தையும், நடிகருமான தியாகராஜன் பிரஷாந்தை ஹீரோவாக வைத்து அப்படத்தை தயாரிக்கிறார்.

 

மோகன் ராஜா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க இருந்த நிலையில், கொரோனா பிரச்சினை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், இந்தியில் தபு நடித்திருந்த வேடத்தில் அவரையே நடிக்க வைக்க திட்டமிட்ட தியாகராஜன் தரப்பு அவரிடம் அனுகிய போது, அவர் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்தியிருக்கும் தியாகராஜன், தபு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை, அவரிடம் தற்போதும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம், என்று கூறியிருக்கிறார்.

 

Tapu