Mar 27, 2019 05:31 AM
ஹீரோயினான பிரபல கிரிக்கெட் வீரரின் மகள்!

சினிமாத் துறையை சேர்ந்த பிரபலங்களின் வாரிசுகள் மட்டும் இன்றி, அரசியல், விளையாட்டு உள்ளிட்ட பலத்துறைகளில் இருக்கும் பிரபலங்களின் வாரிசுகளும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான கபில் தேவின் மகள் அமியா பாலிவுட்டில் ஹீரோயினாக களம் இறங்க உள்ளார்.
கபில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து இந்தியில் 83 என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகிறது. இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் தான் கபில் தேவின் மகள் அமியா ஹீரோயினாக நடிக்கிறார்.
கபிர் கான் இயக்கும் இப்படத்தில், தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில், ஜீவா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.