Nov 17, 2019 03:08 AM
விஜய்க்கு வில்லியாகிறாரா பிரபல பாடகி?

விஜயின் 64 வது படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கல்லூரியை பின்னணியாக கொண்ட இப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்க, விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் விஜே ரம்யா, சாந்தனு, அந்தோணி வர்க்கீஸ், ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ், கவுரி கிஷன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.
படத்தில் ஆண்ட்ரியாவுக்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறதாம். இதற்காக அவர் சண்டைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை தொடர்ந்து ஆண்ட்ரியா விஜய்க்கு வில்லியாக நடிப்பதாக புது தகவல் பரவி வருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஆண்ட்ரியாவிடம் கதை சொல்ல முன் வந்தபோது, கதை சொல்ல வேண்டாம், உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது, என்று கதையை கேட்காமலே ஆண்ட்ரியா ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.