Dec 18, 2020 05:56 AM

சித்ரா தற்கொலை வழக்கியில் சிக்கிய பிரபல தொகுப்பாளர்! - ஆபாச வீடியோ எடுத்தாரா?

சித்ரா தற்கொலை வழக்கியில் சிக்கிய பிரபல தொகுப்பாளர்! - ஆபாச வீடியோ எடுத்தாரா?

தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி அதிகாலை தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சித்ராவின் கணவர் கொடுத்த டார்ச்சரால் தான் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, சித்ராவின் கணவர் ஹேம்நாத்தையும் கைது செய்துள்ளது.

 

தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹேம்நாத்திடம் ஸ்ரீபெரும்பத்தூர் ஆர்.டி.ஓ 8 மணி நேரம் விசாரணையும் நடத்தியுள்ளார்.

 

இந்த நிலையில், சித்ரா தற்கொலை வழக்கில் பிரபல தொகுப்பாளரின் பெயரும் அடிபடுகிறது. சித்ராவுடன் டேட்டிங் சென்ற தொகுப்பாளர், அவரை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆனால், அதை மறுத்திருக்கும் அந்த தொகுப்பாளர், தான் கஷ்ட்டப்பட்டு உழைத்து தான் பணம் சம்பாதித்து வருகிறேன், என்று விளக்கம் அளித்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

 

அதே சமயம், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் பெற்றோர், சித்ரா சமீபத்தில் ஆடம்பர வீடு ஒன்றை கட்டினார். கூடவே சொகுசு கார் ஒன்றையும் வாங்கினார். இதனால் ஏற்பட்ட கடனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பார். அத்தகைய கோணத்திலும் போலீசார் விசாரிக்க வேண்டும். ஆனால், வேறு யாரையோ காப்பாற்றுவதற்காக தங்களது மகனை அவசர அவசரமாக கைது செய்துள்ளனர், என்று கூறியுள்ளனர்.