Apr 10, 2020 07:23 AM

பிரபல டிவி நடிகை கொலையா? - போலீஸார் விசாரணை

பிரபல டிவி நடிகை கொலையா?  - போலீஸார் விசாரணை

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறது. இதனை பயன்படுத்தி சிலர் குற்ற செயல்களில் ஈடுபட செய்கிறார்கள்.

 

சென்னை, அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளி ஒருவரது மனைவியை பால் சப்ளை செய்யும் வாலிபர் ஒருவர், மிரட்டி கற்பழித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீஸார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் அந்த வாலிபரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றுவதோடு, பல டிவி தொடர்களிலும் நடித்து வரும் நடிகை சாந்தி நேற்று தனது வீட்டில் இறந்து கிடந்ததாக செய்தி வெளியாகியுள்ளன.

 

ஐதராபாத், எல்லா ரெட்டிகுடா இன்ஜினியர் காலனி அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை சாந்தி தனியாக வசித்து வந்தாராம். தனியாக வசித்து வந்த அவர், திடீரென்று இறந்ததால், அவரது மரணம் மர்மமாக உள்ளது. 

 

Actress Viswasanthi

 

இதனால், சாந்தியின் உடலை கைப்பற்றிய போலீஸார், தற்கொலையா அல்லது கொலையா, என்ற பாணியில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.