Dec 05, 2019 02:14 AM

ஆபாசமான பேச்சு! - சர்ச்சையில் சிக்கிய மீனா

ஆபாசமான பேச்சு! - சர்ச்சையில் சிக்கிய மீனா

சுமார் 30 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடிகையாக பயணித்துக் கொண்டிருக்கும் மீனா, தமிழ் மட்டும் இன்றி தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக வலம் வந்தார். தற்போது திருமணம், குழந்தை என்று இல்லற வாழ்க்கையில் ஐக்கியம் ஆனாலும், நடிப்பிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

 

அந்த வகையில், மக்களிடம் பிரபலமாகி வரும் வெப் சீரிஸ் உலகிலும் மீனா அறிமுகமாகியிருக்கிறார். ‘கரோலின் காமட்சி’ என்ற வெப் சீரிஸில் சிபிஐ அதிகாரியாக மீனா நடித்திருக்கிறார்.

 

இந்த வெப் சீரிஸின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, வெப் தொடரின் டிரைலர் திரையிடப்பட்டது. அதில் நடிகை மீனா ‘லவடிக்கபால்’ என்ற கெட்ட வார்த்தை பேசும் காட்சியும் இடம்பெற்றது. இதைப் பார்த்து நிருபர்கல் அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.

 

திரைப்படங்களில் இதுபோன்ற கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றால் அதை சென்சார் குழு மியூட் பண்ணிவிடும். ஆனால், வெப் சீரிஸ்களுக்கு சென்சார் உள்ளிட்ட எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை, என்பதால் ஆபாசமான காட்சிகளோடும், அறுவறுக்கத்தக்க கான்சப்ட்டுகளோடும் உருவாகி வருகிறது.

 

யாரோ ஒரு அறிமுக நடிகரோ நடிகையோ இப்படி பேசியிருந்தால் அது சாதாரணமாக இருந்திருக்கும். தமிழக ரசிகர்களின் மனதிற்கு மிக நெருக்கமாக உள்ள நடிகைகளில் ஒருவரான மீனா, இப்படிப்பட்ட வசனம் பேசியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துவிட்டது.

 

மேலும், பத்திரிகையாளர் சந்திப்பில் மீனா இப்படி கெட்ட வார்த்தை பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மீனாவை பதிலளிக்க விடாமல், வெப் சீரிஸின் தயாரிப்பு தரப்பு விளக்கம் கொடுக்க, நிருபர் ஒருவர் திடீரென்று மீனாவிடம், ”“லவடிக்கபால்” வார்த்தைக்கு அர்த்தம் என்ன மேடம்”, என்று கேட்க, நடிகை மீன அழுவாத குறையாக முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டார்.