பிரபு தேவாவின் ’லக்ஷ்மி’ படப்பிடிப்பு முடிந்தது!

‘தேவி’ படத்தின் வெற்றியை தொடர்ந்த் மீண்டும் இயக்குநர் விஜயும், பிரபு தேவாவும் இணைந்திருக்கும் படத்திற்கு ‘லக்ஷ்மி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடனத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு ஷாம் சி.எஸ் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பிரமோத் பிலிம்ஸ் ப்ரதீக் சக்ரவர்த்தி, ஷ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று தயாரிப்பாளர்கள் சார்பில் பிரபு தேவாவுக்கு ஒரு ஓவியத்தை பரிசளித்தனர். இந்த பரிசு பிரபு தேவாவை திகைப்படைய வைத்துவிட்டதாம்.
இது குறித்து கூறிய தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா, “இயக்குனர் விஜய் ஒரு கண்னியமான மனிதர், தயாரிப்பாளருக்கு தோள் கொடுக்கும் நண்பர். தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் அவரின் யோசனைகள், திட்டமிடல், செயல்படுத்தும் விதம் ஆகியவற்றில் கை தேர்ந்தவர். வெளியில் கேட்டதை விட, லக்ஷ்மி படத்தின் மூலம் நாங்கள் அனுபவத்திலேயே அவற்றை உணர்ந்திருக்கிறோம்” என்றார்.