ஜல்லிக்கட்டு போராளிக்காக லாரன்ஸ் கட்டிக்கொடுத்த வீடு!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான இளைஞர்களில் யோகேஸ்வரன் என்பவரும் ஒருவர். சோலத்தைச் சேர்ந்த யோகேஷ்வரன், ரயில் விபத்தில் அடிபட்டு இறந்துவிட்டார்.
அவரையே நம்பியிருந்த அவரது பெற்றோர்கள் தளர்ந்துவிட, அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் ராகவா லாரன்ஸ், உங்களது மகனாக நான் இருந்து, யோகேஸ்வரன் செய்ய வேண்டி அனைத்தையும் செய்வேன், என்று உறுதியளித்ததோடு, யோகிஸ்வரனின் தங்கையின் படிப்புக்கு உதவி செய்தார்.
யோகேஸ்வரனின் குடும்பத்தார் வாழ்வதற்காக இடம் ஒன்றை வாங்கி அதில் சுமார் ரூ.25 லட்சத்தில் வீடு ஒன்ரையும் லாரன்ஸ் கட்டி வந்தார். தற்போது அந்த வீட்டின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், நாளை அந்த வீட்டின் கிரகபிரவேச நிகழ்வை லாரன்ஸே முன் நின்று நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி தான் யோகேஸ்வரன் உயிரிழந்தார். அதே பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் வீட்டை கட்டிமுடிக்கும் பணியில் மும்முரம் காட்டிய லாரன்ஸ், தான் நினைத்தது போலவே, பிப்ரவரி 7 ஆம் தேதி யோகேஸ்வரைனின் குடும்பத்தாருக்காக கட்டிய புது வீட்டில் பால் காய்ச்சுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.