Apr 18, 2019 05:22 AM
ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக நேற்று இரவு சென்னை வந்த ரஜினிகாந்த், இன்று காலை முதல் ஆளாக வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
ரஜினிகாந்த் வாக்களிக்க வருவதை அறிந்த மக்கள் அவரை காண திரண்டிருந்தனர்.
இதோ புகைப்படங்கள்,